செய்திகள்

மோடி ஹெலிகாப்டரை சோதித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்டு- தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Published On 2019-04-18 07:04 GMT   |   Update On 2019-04-18 07:04 GMT
ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். #PMModi #ElectionCommission
புதுடெல்லி:

ஒடிசாவில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. எனவே பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

அங்கு அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரி முகமது மோஷின் சோதனை நடத்தினார். இதுகுறித்து தேர்தல் கமி‌ஷனிடம் பிரதமர் மோடி புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து ஒரு நபர் விசாரணை குழுவை தேர்தல் கமி‌ஷன் ஒடிசாவுக்கு அனுப்பியது. விசாரணையின் முடிவில் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெறும் பிரதமர் போன்றோருக்கு இத்தகைய சோதனையில் இருந்து விதிவிலக்களித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்திய தேர்தல்கமி‌ஷனின் அறிவுறுத்தலுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்தவாரம் சுந்தர்கர் பகுதியில் பிரசாரம் செய்த ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சஸ்பெண்டு ஆன தேர்தல் அதிகாரி முகமது மோஷின் கர்நாடகாவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் தேர்தல் கண்காணிப்பாளராக ஒடிசாவில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார். #PMModi #ElectionCommission
Tags:    

Similar News