செய்திகள்

முஸ்லிம் லீக் வைரசால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டு உள்ளது - யோகி ஆதித்யநாத் தாக்கு

Published On 2019-04-05 13:12 GMT   |   Update On 2019-04-05 13:12 GMT
முஸ்லீம் லீக் என்ற வைரசால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டு உள்ளது என உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #LSpolls2019 #Congress #MuslimLeague #YogiAdityanath
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்று கேரளாவுக்கு தங்கை பிரியங்காவுடன் சென்ற ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வயநாட்டில் முஸ்லிம் லீக் ஆதரவுடன் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது.

இந்நிலையில், முஸ்லீம் லீக் என்ற வைரசால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டு உள்ளது என உத்தரபிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முஸ்லிம் லீக் கட்சி வைரஸ் போன்றது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழமுடியாது. தற்போது இந்த வைரசால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வெற்றி பெற்றால் என்னவாகும்? இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவி விடும் என பதிவிட்டுள்ளார். #LSpolls2019 #Congress #MuslimLeague #YogiAdityanath
Tags:    

Similar News