செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் - நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

Published On 2019-04-03 21:04 GMT   |   Update On 2019-04-03 21:04 GMT
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு சாதகமாக உள்ளதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #BJP #NirmalaSitharaman #Congress
புதுடெல்லி:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இது குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கருத்து தெரிவிக்கையில், நாட்டை துண்டாடுவது தான் காங்கிரசின் நோக்கம் என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து கூறியதாவது:-

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு சாதகமாக உள்ளது. பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் ஊக்குவிக்கும். ராணுவத்தின் நம்பிக்கையை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது. ஆயுதப்படை சட்டத்தை அகற்றுவதில் சில விதிமுறைகள் உள்ளன. இதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அரசு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மேகாலயா, திரிபுரா, அசாமின் பெரும் பகுதியில் இதை அகற்றி உள்ளது. ஆனால் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இருந்த காங்கிரஸ் அரசு எத்தனை மாநிலங்களில் இதை அகற்றி இருக்கிறது. காங்கிரசின் திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

புலவாமா தாக்குதலில் இறந்த ராணுவ வீரர்களை தியாகிகளாக அறிவிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி வந்தார். ஆனால் அது குறித்து அவர்களின் தேர்தல் அறிக்கையில் இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #NirmalaSitharaman #Congress
Tags:    

Similar News