செய்திகள்

மோடி, அமித் ஷா தலைமையில் பாஜக பாராளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது

Published On 2019-03-08 16:22 GMT   |   Update On 2019-03-08 16:22 GMT
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் பாஜக பாராளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. #BJP #ParliamentaryBoardmeeting
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பாஜக சார்பில் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று இரவு நடைபெற்றுது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நிதி மந்திரி அருண் ஜெட்லி, சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாலக்கோட்டில் விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. #BJP #ParliamentaryBoardmeeting
Tags:    

Similar News