search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற குழு"

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர்
    • கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    மத்திய பாராளுமன்ற நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை குழு அதன் தலைவர் லாக்கட் சட்டர் ஜி தலைமையில் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று மாலை கன்னியாகுமரி வந்தது.

    இந்த குழுவில் மொத்தம் 30 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டனர்.

    முன்னதாக இந்த பாராளுமன்ற குழுவினரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்று மண்டபத்தை சுற்றி காண்பித்து விளக்கி கூறினார்.

    அப்போது எம்.பி.க்கள் குழுவினர் விவேகானந்தர் பாறையில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தை பார்த்து வணங்கினர். மேலும் அங்கு உள்ள தியான மண்டபத்தில் எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தியானம் செய்தனர். அதன் பின்னர் இந்த பாராளுமன்ற குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு எம்.பி.க்கள் குழுவினரை கோவில் மேலாளர் ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

    பின்னர் பாராளுமன்ற குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு கன்னியாகுமரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்வையிட்டனர். பின்னர் பாராளுமன்ற குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

    • இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளது
    • சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அந்நாட்டின் பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது.

    கட்டிடக் கலையில் சிறந்த படைப்பாக கருதப்படும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. பாராளுமன்றம் செயல்படக்கூடிய இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும், கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் பாராளுமன்ற குழு கூறி உள்ளது.

    இதுபற்றி பிரிட்டன் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும், பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றுவரை, கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

    பாராளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் என்னென்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று கூட முடிவெடுக்கவில்லை. பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் செலவும் முடிவு செய்யப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும். அது வரி செலுத்துவோருக்கே கூடுதல் சுமையாகும்.

    அரண்மனையில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்காக பிரிட்டன் பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவு செய்கிறது. ஆனாலும், சுகாதாரம், பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.67 கோடி செலவில் நவீன மயமாகும் ரெயில் நிலைய விரிவாக்க திட்ட பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    கன்னியாகுமரி:

    இந்திய ரெயில்வே பாராளுமன்ற நிலைக்குழு அதன் தலைவர் ராதா மோகன்சிங் தலைமையில் கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, கொடிக்கு ன்னில் சுரேஷ், சந்திராணி முர்மு, முகேஷ் ராஜ்புட், ரமேஷ் சந்தர், கோபால் ஜி தாகூர், சுமேர் சிங் சோலங்கி, கிருமேக்ட்டோ உள்பட 12 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த எம்.பி.க்கள் குழு வினர் இன்று அதிகாலை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித் துறையில் சூரியன் உதய மாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

    பின்னர் கன்னியாகுமரி ரெயில் நிலையம் சென்று ஆய்வு செய்தனர். அங்கு ரூ.67 கோடி செலவில் நவீன மயமாகும் ரெயில் நிலைய விரிவாக்க திட்ட பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    மேலும் அங்கு நடை பெற்று வரும் கூடுதல் ரெயில் பாதை அமைக்கும் பணி, கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி, மற்றும் இரட்டைரெயில்பாதை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    அதன் பிறகு எம்.பி.க்கள் குழு, விவேகானந்தர்நினைவு மண்டபத்துக்கு தனிபடகில் சென்றனர். அங்கு அவர்களை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறு ப்பாளர் ஆர். சி. தாணு, மக்கள் தொடர்புஅதிகாரி அவினாஷ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன் ஆகி யோர் வரவேற்றனர். பின்னர் எம்.பி.க்கள் குழு வினர் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிபார்வை யிட்டனர்.

    ×