30 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற குழு கன்னியாகுமரி வந்தது

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர்கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
30 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற குழு கன்னியாகுமரி வந்தது
Published on

கன்னியாகுமரி :

மத்திய பாராளுமன்ற நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை குழு அதன் தலைவர் லாக்கட் சட்டர் ஜி தலைமையில் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று மாலை கன்னியாகுமரி வந்தது.

இந்த குழுவில் மொத்தம் 30 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிட்டனர்.

முன்னதாக இந்த பாராளுமன்ற குழுவினரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்று மண்டபத்தை சுற்றி காண்பித்து விளக்கி கூறினார்.

அப்போது எம்.பி.க்கள் குழுவினர் விவேகானந்தர் பாறையில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தை பார்த்து வணங்கினர். மேலும் அங்கு உள்ள தியான மண்டபத்தில் எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தியானம் செய்தனர். அதன் பின்னர் இந்த பாராளுமன்ற குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு எம்.பி.க்கள் குழுவினரை கோவில் மேலாளர் ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

பின்னர் பாராளுமன்ற குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு கன்னியாகுமரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்வையிட்டனர். பின்னர் பாராளுமன்ற குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com