செய்திகள்

காங்கிரஸ் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராக நீரஜ் குந்தன் நியமனம்

Published On 2019-02-13 15:33 GMT   |   Update On 2019-02-13 15:33 GMT
காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் (என்.எஸ்.யு.ஐ.) தலைவராக நீரஜ் குந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் டெல்லி தலைமை இன்றிரவு அறிவித்துள்ளது. #NeerajKundan #NSUIPresident

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சங்கங்களின் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

கேரளா மாநில மாணவர் சங்கம் மற்றும் மேற்கு வங்காளம் மாநில மாணவர் சங்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கடந்த 9-4-1971 அன்று இந்திய தேசிய மாணவர் சங்கத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவாக்கி இருந்தார்.



இதேபோல், பா.ஜ.க.தரப்பில் ஏ.பி.வி.பி. (ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பு) இயங்கி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராக நீரஜ் குந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் டெல்லி தலைமை இன்றிரவு அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல் காந்தி பெயரில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததாக அக்கட்சியின் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NeerajKundan #NSUIPresident
Tags:    

Similar News