செய்திகள்

கர்நாடக கூட்டணியில் குழப்பம்: டெல்லியில் ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு

Published On 2019-01-31 01:51 GMT   |   Update On 2019-01-31 01:51 GMT
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து கூட்டணியில் எழுந்துள்ள குழப்பம் குறித்து பேசியுள்ளார். #Siddaramaiah #RahulGandhi
பெங்களூரு :

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி பற்றி காங்கிரசை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., விமர்சனம் செய்தார். இதே நிலை தொடர்ந்தால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., தான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி பொதுக்கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தேவேகவுடா மற்றும் குமாரசாமி, சித்தராமையாவை விமர்சனம் செய்துள்ளனர். காங்கிரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதன் காரணமாக கூட்டணியில் குழப்பம் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணியில் எழுந்துள்ள குழப்பம் குறித்து சில தகவல்களை ராகுல் காந்திக்கு சித்தராமையா தெரிவித்தார். #Siddaramaiah #RahulGandhi
Tags:    

Similar News