செய்திகள்

குடியரசு தின ஒத்திகையின்போது பாகிஸ்தானை வாழ்த்தி முழக்கமிட்ட பெண்- டெல்லியில் பரபரப்பு

Published On 2019-01-14 07:08 GMT   |   Update On 2019-01-14 07:08 GMT
டெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நடந்தபோது, ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். #Republicday #womanarrested
புதுடெல்லி:

டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் இன்று குடியரசு தின விழாவிற்கான ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது ஒரு பெண், உயர் பாதுகாப்பு நிறைந்த அந்த பகுதிக்குள் நுழைந்து, ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



மனநலம் பாதிக்கப்பட்டதாக  நம்பப்படும் அந்தப் பெண் ஹைதராபாத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் இடத்தை சேர்ந்த சுல்தானா  என கண்டறியப்பட்டுள்ளது. அமர் ஜவான் ஜோதிக்குள் நுழைய முயன்ற அவரை, டெல்லி  காவல்துறையினர் கைது செய்து பாராளுமன்ற வீதி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சுல்தானா, மும்பையில் தனது உறவினர்களை சந்திக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் நிஜாமாபாத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் வழிதவறி டெல்லிக்கு வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை, காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

நிஜாமாபாத்தில் இருந்து புறப்படும்போது, யாரிடமும் சொல்லாமல் வந்ததாகவும், இதனால் அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சுல்தானாவிடம் இருந்து சந்தேகத்திற்குரிய எந்த பொருளும் கைப்பற்றப்படாததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Republicday #womanarrested
Tags:    

Similar News