செய்திகள்

கம்ப்யூட்டர் கண்காணிப்புக்கு எதிரான மனுவை விசாரிப்பது எப்போது? சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்

Published On 2019-01-04 21:02 GMT   |   Update On 2019-01-04 21:02 GMT
கம்ப்யூட்டர்களில் ஊடுருவி கண்காணிக்க 10 உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிரான மனுவை விசாரிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்துள்ளது. #SupremeCourt
புதுடெல்லி:

நாட்டில் உள்ள எல்லா கம்ப்யூட்டர்களிலும் ஊடுருவி கண்காணிக்க 10 உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனோகர் லால் சர்மா என்ற வக்கீல் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.


அதில், இந்த அறிவிப்பாணை சட்ட விரோதமானது என்றும், இதன்படி செயல்பட விசாரணை அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.



தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த விவகாரத்தை மனோகர் லால் சர்மா முறையிட்டார். அவசர மனுவாக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள், “பார்க்கிறோம். எப்போது தேவையோ அப்போது விசாரிப்போம்” என்று கூறினர். #SupremeCourt
Tags:    

Similar News