செய்திகள்

நாக்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியை தாக்கிய வழக்கறிஞர்

Published On 2018-12-26 11:01 GMT   |   Update On 2018-12-26 11:01 GMT
நாக்பூரில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதியை அரசு வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #JudgeAssaust
நாக்பூர்:

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று மூத்த சிவில் நீதிபதி கே.ஆர்.தேஷ்பாண்டே ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். பின்னர் அவர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்தபோது, அவரை அரசுத் தரப்பு உதவி வழக்கறிஞர் டிஎம் பராதே தாக்கியதாக தெரிகிறது.

இதுபற்றி சதார் காவல் நிலையத்தில் நீதிபதி தேஷ்பாண்டே புகார் அளித்துள்ளார். வழக்கின் தீர்ப்பு தொடர்பாக நீதிபதியுடன் வழக்கறிஞர் பராதே வாக்குவாதத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. ஆனால், இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மாவட்ட அரசு பிளீடர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு (குற்றம்சாட்டப்பட்டவர்) ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை சரியான முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களிடம் இருந்து இதுபோன்ற செய்கைகளை சமூகம் எதிர்பார்க்கவில்லை என்றும் பிளீடர் கூறியுள்ளார். #JudgeAssaust
Tags:    

Similar News