செய்திகள்

டெல்லியில் சரத்பவார்-கெஜ்ரிவாலுடன் முக ஸ்டாலின் சந்திப்பு

Published On 2018-12-10 05:33 GMT   |   Update On 2018-12-10 07:31 GMT
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரை முக ஸ்டாலின் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். #MKStalin #KarunanidhiStatue
புதுடெல்லி:

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வருகிற 16-ந்தேதி நடைபெறுகிற விழாவில் கருணாநிதி சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை டெல்லி சென்றார்.

டெல்லி அக்பர் ரோட்டில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்தார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் வழங்கி அழைப்பு விடுத்தார்.


இன்று காலை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை மு.க.ஸ்டாலின் சந்தித்து கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

பின்னர் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். #DMK #MKStalin #KarunanidhiStatue
Tags:    

Similar News