செய்திகள்

மோடியைவிட அதிக இடங்களில் பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத்

Published On 2018-12-08 07:19 GMT   |   Update On 2018-12-08 07:19 GMT
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைவிட உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா சார்பில் 4 மாநிலத்தில் அதிக இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். #PMModi #BJP #YogiAdityanath
லக்னோ:

5 மாநில சட்டசபை தேர்தல் நேற்று முடிவடைந்தது. சத்தீஷ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாகவும், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டு எண்ணிக்கை 11-ந்தேதி நடக்கிறது.

இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கவும் அந்த கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரைவிட உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பா.ஜனதா சார்பில் 4 மாநிலத்தில் அதிக இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.



யோகி ஆதித்யநாத் 74 பொதுக்கூட்டங்களில் பேசி உள்ளார். ராஜஸ்தானில் அதிகபட்சமாக 26 இடங்களில் பிரசாரம் செய்தார். மத்திய பிரதேசம்- 17, தெலுங்கானா -8, சத்தீஷ்கர்-23-ல் பிரசாரம் செய்தார்.

பிரதமர் மோடி 31 இடங்களிலும் (மத்திய பிரதேசம்-10, ராஜஸ்தான்-12, தெலுங்கானா -5 சத்தீஷ்கர்-4) அமித்ஷா 56 இடங்களிலும் (மத்திய பிரதேசம்- 23, ராஜஸ்தான் -15, தெலுங்கானா -10, சத்தீஷ்கர்-8). இடங்களில் பிரசாரம் செய்தனர்.அமித்ஷா கூடுதலாக மிசோரம் மாநிலத்தில் 2 இடங்களில் பேசினார்.

பா.ஜனதாவில் பிரசார பணியில் யோகி ஆதித்யநாத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. அவர் தனது பிரசாரத்தில் இந்துத்வா கொள்கை மற்றும் ராமர் கோவிலுக்கு முக்கியத்துவம் அளித்தார். #PMModi #BJP #YogiAdityanath
Tags:    

Similar News