செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Published On 2018-11-12 11:07 GMT   |   Update On 2018-11-12 11:07 GMT
சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் 5 நக்சலைட்கள் கோப்ரா படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #Chhattisgarhencounter #fiveNaxalsdead #Bijapurencounter
ராய்ப்பூர்:

90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் இன்று காலை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும், இன்று பிற்பகல் பிஜப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாமெட் பகுதியில் நக்சலைட்களுக்கும் ‘கோப்ரா’ எனப்படும் நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு படையினருக்கும் இடையில்  பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

கமாண்டோ படையை சேர்ந்த இரு வீரர்களும், கோப்ரா படையை சேர்ந்த மூன்று வீரர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்தனர். #Chhattisgarhencounter  #fiveNaxalsdead #Bijapurencounter 
Tags:    

Similar News