search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவோயிஸ்ட்"

    • ஒரு வீட்டில் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய நுழைந்த போது போலீஸ் சுற்றி வளைப்பு.
    • மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டனர்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கேரள மாநில காவல்துறையின் சிறப்புப்படைக்கும்- மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இறுதியில் இரண்டு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர்.

    கோழிக்கோடு மாவட்டம் அருகே மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான நபர் மூலம், தலப்புழா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக புலனாய்வுத்துறை தெரிந்து கொண்டது.

    அதன்பேரில் தலப்புழா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையின் சிறப்புப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யவதற்காக ஒரு வீட்டில் ஐந்து நக்சலைட்டுகள் நுழைந்ததை கண்டுபிடித்து, அந்த வீட்டை சுற்றி வளைத்தது.

    அப்போது வீட்டில் இருந்த நக்சலைட் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று நக்சலைட் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் ஒரு ஆண், ஒரு பெண் என இரு நக்சலைட்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
    • அவர்களின் தியாகம் எப்போதும் நினைவுக்கூரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பத்து போலீசார் மற்றும் ஓட்டுனர் பலியாகினர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    "சத்தீஸ்கர் போலீசார் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் எப்போதும் நினைவுக்கூரப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் டுவிட் செய்துள்ளார். 

    பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #BhimaKoregaon #UrbanNaxals
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

    அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. 

    அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இதனை அடுத்து, வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். 

    இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

    இந்த மனுக்களை அப்பப்போது விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அமர்வு சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்ததோடு 5 பேரின் வீட்டுக்காவலை நீட்டித்து வந்தது. 

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி கன்வில்கர் தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில், மனித உரிமை ஆர்வர்லர்கள் கைது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட விரும்பவில்லை. விசாரணை நீதிமன்றத்தை அனுகி மனுதாரர்கள் கோரிக்கை விடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும், 5 பேரின் வீட்டுக்காவலை 4 வாரங்களுக்கு நீட்டித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 
    பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி கைது செய்யப்பட்ட 5 மனித உரிமை ஆர்வலர்களின் வீட்டுக்காவலை 17-ம் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #BhimaKoregaon #UrbanNaxals
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

    அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. 

    அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இதனை அடுத்து, வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். 

    இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

    இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 5 பேரின் வீட்டுக்காவலை 17-ம் தேதி வரை நீட்டித்தார்.

    கடந்த விசாரணையின் போது வழக்கில் மிக முக்கியமாக கருதப்படும் ஆவணங்களை மகாராஷ்டிரா போலீசார், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பகிரங்கமாக வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
    பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. #BhimaKoregaon #UrbanNaxals
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

    அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. 

    அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இதனை அடுத்து, வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். 

    இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

    இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 5 பேரின் வீட்டுக்காவலை 12-ம் தேதி வரை நீட்டித்தார்.

    மேலும், வழக்கில் மிக முக்கியமாக கருதப்படும் ஆவணங்களை மகாராஷ்டிரா போலீசார், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி பகிரங்கமாக வெளியிட்டது பொறுப்பற்ற செயல் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
    பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது ஏன்? என போலீசாருக்கு மும்பை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. #BhimaKoregaon #UrbanNaxals
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

    அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. 

    அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இதனை அடுத்து, வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். 

    இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

    இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா காவல் துறை கூடுதல் தலைவர், வழக்கு தொடர்பான எல்லா தகவல்கள் மற்றும் ஆவணங்களை ஊடகங்களிடம் வெளியிட்டார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், போலீசார் செய்தியாளர்களை சந்தித்தது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். 
    பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளனர். #BhimaKoregaon #SudhaBharadwaj
    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

    அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. 

    அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இந்நிலையில், அவரை கைது செய்ய புனே போலீசார், நேற்று ஐதராபாத்துக்கு வந்தனர். ஐதராபாத் போலீசாரின் ஒத்துழைப்புடன், வரவர ராவின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான கே.வி.குர்மாநாத், புகைப்பட நிபுணர் கிராந்தி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    பின்னர், வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரை ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, புனேவுக்கு அழைத்து சென்றனர். புனே கோர்ட்டில் இன்று அவரை ஆஜர்படுத்துகிறார்கள்.

    இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் பிற்பகல் 3.45 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. 
    ஒடிசா மாநிலத்தில், தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த தம்பதிகள் போலீசாரிடம் சரணடைந்தனர். #Maoist
    புபனேஷ்வர் :

    ஒடிசா மாநிலத்தில், மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள காவல் நிலையத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ் மற்றும் ரத்னா தம்பதியர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக முகேஷ் மற்றும் ரத்னா தம்பதியரின் தலைக்கு முறையே ரூ.4 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மாநில அரசு அறிவித்துள்ள சரண் அடைபவர்களுக்கான சிறப்பு திட்டத்தின்படி மவோயிஸ்ட் தம்பதியர் இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்துவிட்டதாக மால்கங்கிரி மாவட்ட எஸ்.பி.மீனா தெரிவித்துள்ளார்.

    வன்முறை வாழ்க்கையை துறந்துவிட்டு சரணடைந்ததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையான ரூ.5 லட்சத்தை போலீசார் தம்பதியரிடம்  வழங்கினர் . #Maoist
    தாமாக முன்வந்து சரணடைந்த மாவோயிஸ்ட் இயகத்தை சேர்ந்தவருக்கு, போலீசார் தரப்பில் 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. #Maoist
    ராஞ்சி :

    ஜார்கண்ட் மாநிலம், லேட்ஹர் மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் போலீசாரின் 214 படைப்பிரிவு முகாமில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்சியில் போலீஸ் டி.ஜி.பி.விபுல் சுக்லா மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் டி.ஐ.ஜி. ஜயந்த் பால் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    அவர்கள், முன்னிலையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த விரேந்திர அலியாஸ் சங்கர் எனும் நபர் போலீசாரிடம் சரணடைந்தர். இவரின் தலைக்கு 5 லட்சம் ரூபாய் போலீசாரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாமாகவே விரேந்திர அலியாஸ் சங்கர் போலீசாரிடம் சரணடைந்ததால் அவரது தலைக்கு அறிவிக்கப்பட்டிருந்த பரிசு தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை போலீசார் அவரிடம் அளித்தனர்.  #Maoist
    ×