search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார் ராகுல் காந்தி.. மோடி சாடல்
    X

    மாவோயிஸ்டுகளின் மொழியில் பேசுகிறார் ராகுல் காந்தி.. மோடி சாடல்

    • ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • எந்தவொரு தொழிலதிபரும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிப்பார்கள் என்று தெரிவித்தார்

    ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்சத்பூரில் பிரச்சாரப் பேரணியில் பேசிய அவர், "பரம்பரைக் கட்சி அரசியலை ஆதரிக்கும் காங்கிரஸ், மக்களவைத் தொகுதிகளை தங்களின் மூதாதையரின் சொத்துக்களாக கருதுகிறது. எந்தவொரு தொழிலதிபரும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிப்பார்கள். அதற்கு காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) பேசும் தொனி மாவோயிஸ்டுகளின் மொழியாக இருப்பதே ஆகும்.

    அதைப் பயன்படுத்தி புதுமையான வழிகளில் தொழிலதிபர்களிடமிருந்து காங்கிரஸ் பணம் பறிக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு, இளவரசரின் (ராகுல் காந்தியின்) தொழில் எதிர்ப்பு மற்றும் தொழிலதிபருக்கு எதிரான மாவோயிஸ்ட் மொழியுடன் அவர்கள் உடன்படுகிறார்களா என்பதற்கு பதிலளிக்க தைரியமாக இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர் அங்கு பேசுகையில், மக்களின் அடிப்படை வசதிகளை காங்கிரஸ் மறுத்து வருவதாகவும் ஜார்கண்டில் 18,000 கிராமங்களின் நிலை 18 ஆம் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இருந்தது என்றும் தெரிவித்தார். தற்போது ஜார்கண்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×