செய்திகள்

1971ல் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போரின் கதாநாயகனாக விளங்கிய கடற்படை தளபதி காலமானார்

Published On 2018-11-04 23:44 GMT   |   Update On 2018-11-04 23:44 GMT
இந்தியா பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின் கதாநாயகனாக விளங்கிய கடற்படை தளபதி மனோகர் பிரஹலாத் காலமானார். #1971war #ManoharPralhadAwati
புதுடெல்லி:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின் கதாநாயகனாக விளங்கிய கடற்படை தளபதி மனோஹர் பிரஹலாத் அவதி நேற்று வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 91. இவர் மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தின் வின்சர்னி கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்தியாவுக்கும்  பாகிஸ்தானுக்கும் இடையே 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற முக்கிய  காரணமாக அமைந்தவர். பாகிஸ்தான் நாட்டின் நீர்மூழ்கி கப்பல்களை அழிக்க காரணமாக இருந்தார். வீர் சக்ரா விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



மனோகர் பிரஹலாத் மரணம் குறித்து அறிந்த பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 1971ம் ஆண்டு போரில் கதாநாயகனாக செயல்பட்ட மனோகர் பிரஹலாத் மரணம் அடைந்த செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #1971war #ManoharPralhadAwati
Tags:    

Similar News