செய்திகள்

உ.பி.யில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உதவிய ராணுவ வீரர் கைது

Published On 2018-10-18 00:12 GMT   |   Update On 2018-10-18 00:12 GMT
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தகவல்களை அளித்தது தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ராணுவ வீரரை உளவுப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். #SoldierArrest
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரில் ராணுவ வீரர் ஒருவர் பணியாற்றி வந்தார். இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர்.

சமீப காலமாக இவரது நடவடிக்கைகளில் ராணுவத்தின் உளவு பிரிவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தது. 

இந்நிலையில், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்த்ததை ராணுவ உளவுப்பிரிவு கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.



அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக ராணுவத்தில் அவர் பணியாற்றி வருவதும், பல்வேறு ராணுவ ரகசியங்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளுடன் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்து வரும் அவர், சமூக வலைத்தளம் மூலம் முக்கியமான ராணுவ ரகசியங்களை அவர்களுக்கு வழங்கியதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, அவரை காவலில் எடுத்துள்ள ராணுவ உளவுப் பிரிவினர் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #SoldierArrest
Tags:    

Similar News