செய்திகள்

சத்தீஸ்கரில் காங்கிரஸ் செயல் தலைவர் பாஜகவுக்கு தாவினார்

Published On 2018-10-13 10:21 GMT   |   Update On 2018-10-13 10:21 GMT
சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் இன்று அக்கட்சியில் இருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChhattisgarhElection #BJP #Congress #AmitShah
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நவம்பர் 12ம் தேதியும், 72 தொகுகளில் 20ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், பாலி தனகார் தொகுதி எம்எல்ஏவுமான ராம்தயாள் இன்று திடீரென கட்சி தாவினார். பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் முதல்வர் ராமன் சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பழங்குடியின தலைவர்களில் செல்வாக்கு மிக்க தலைவரான ராம்தயாள் விலகியது, காங்கிரசுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் அவர் காங்கிரசின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChhattisgarhElection #BJP #Congress #AmitShah
Tags:    

Similar News