செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி திருநாவுக்கரசர் கருத்து

Published On 2018-09-07 03:17 GMT   |   Update On 2018-09-07 03:17 GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது குறித்து திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். #RajivAssassination #SC #Thirunavukkarasar
புதுடெல்லி:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறதே? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-



சட்டம் எதுவோ, சட்டப்படி நடக்கும். ராஜீவ்காந்தி தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். அது இன்னும் மக்கள் மனதில் காயமாக இருக்கும் விஷயம். அதேநேரத்தில் குற்றவாளிகள் 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். ராகுல்காந்தி கூட, என் அப்பா ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது எனக்கு வருத்தம் தான் என்று கூறியிருக்கிறார். அதற்காக யாரையும் பழி வாங்க வேண்டும் என்று ராகுல்காந்தி நினைப்பதில்லை. எனவே எது சட்டமோ, அரசாங்கம் என்ன நினைக்கிறதோ, அது நடக்கட்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் பதில் அளித்தார்.  #RajivAssassination #SC #Thirunavukkarasar
Tags:    

Similar News