தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

Published On 2024-05-27 02:24 GMT   |   Update On 2024-05-27 02:24 GMT
  • தீவிர புயலாக வலுவடைந்த ரீமால் புயல் கரையை கடந்தது.
  • சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வபோது வெயில் சுட்டெரித்து வருகிறது.

வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வபோது வெயில் சுட்டெரித்து வருகிறது.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மாதம் (ஜூன்) 1ம் தேதி இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News