தமிழ்நாடு செய்திகள்

SIRக்கு பின்பு தமிழ்நாட்டில் அதிக மற்றும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் எவை?

Published On 2026-02-23 17:03 IST   |   Update On 2026-02-23 17:03:00 IST
  • தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது
  • SIR பணிகளுக்கு பின் தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும் பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். SIRக்கு பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள்: 5,36,991 ஆகும்.

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதியில்மொத்த வாக்காளர்கள்: 1,16,896 ஆகும்

முன்னதாக தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவை தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி நீண்ட காலமாக இருந்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதி அந்த இடத்தைப் பிடித்துள்ளது

Tags:    

Similar News