இந்தியா

ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு மம்தா வாழ்த்து

Published On 2024-05-27 01:23 GMT   |   Update On 2024-05-27 01:23 GMT
  • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வென்றது.
  • வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

இந்நிலையில், 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வங்காளம் முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் சாதனை படைத்த வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை தனிப்பட்ட முறையில் வாழ்த்த விரும்புகிறேன்.

வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News