செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கைப்பற்றிய போலீசார்

Published On 2018-09-04 11:38 GMT   |   Update On 2018-09-04 12:31 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா நகரில் இருந்து கடத்தப்பட இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #HeroinSeized
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் உட்பட எல்லையோர மாநிலங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க, போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஹந்த்வாரா பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 22.145 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் எனப்படும் மிக உயர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த பஞ்சாப் மாநிலத்தில் இருந்த ஒருவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17.49 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #JammuKashmir #HeroinSeized
Tags:    

Similar News