செய்திகள்

சகோதரிகளுக்கு 2,400 கழிவறைகளை பரிசாக வழங்கிய சகோதரர்கள்

Published On 2018-08-28 02:43 GMT   |   Update On 2018-08-28 02:43 GMT
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் ‘ராக்கி’ கட்டிய சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் 2,400 கழிவறைகளை கட்டி பரிசாக கொடுத்துள்ளனர். #RakshaBandhan
பெங்களூரு :

சகோதர-சகோதரிகள் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நேற்று முன்தினம் ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தின்போது சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் மற்றும் பிற ஆண்களுக்கு சகோதர பாசத்துடன் அவர்களின் கைகளில் ‘ராக்கி’ கட்டுவார்கள். இதைத்தொடர்ந்து சகோதரிகளுக்கு, சகோதரர்கள் பரிசுகளை வழங்குவார்கள்.



இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நடந்த ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் ‘ராக்கி’ கட்டிய சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் கழிவறைகள் கட்டி பரிசாக கொடுத்துள்ளனர். பெலகாவி முழுவதும் இவ்வாறாக 2,400 ஆயிரம் கழிவறைகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன.

பெலகாவி மாவட்ட மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ராமசந்திரன் வீடுகளில் கழிவறைகள் கட்டுவதன் அவசியம் குறித்து பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதில் ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாட்டத்தில் சகோதரிகளுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்து பரிசாக அளிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இவருடைய முயற்சியின் நடவடிக்கையாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RakshaBandhan
Tags:    

Similar News