செய்திகள்

வேட்புமனுவில் கடன் விவரங்களை மறைத்ததாக அமித் ஷா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்

Published On 2018-08-13 21:45 GMT   |   Update On 2018-08-13 21:45 GMT
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஜெய்ராம் ரமேஷ், விவேக் தங்கா ஆகியோர் அடங்கிய குழு, நேற்று தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்று, பா.ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக புகார் மனு கொடுத்தது. #Congress #ElectionCommission #AmitShah
புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஜெய்ராம் ரமேஷ், விவேக் தங்கா ஆகியோர் அடங்கிய குழு, நேற்று தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்று, பா.ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக புகார் மனு கொடுத்தது.

அதில், குஜராத்தில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் அமித் ஷா தனது 2 சொத்துகளை அடகு வைத்து, தன் மகனுக்காக ரூ.25 கோடி கடன் பெற்றுள்ளதாகவும், ஆனால், நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் வேட்புமனுவில் அந்த கடன் விவரத்தை குறிப்பிடாமல் அமித் ஷா மறைத்து விட்டதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.



எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறியதற்காக, அமித் ஷா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த மனுவை மாநிலங்களவை தலைவருக்கு அனுப்பி, அமித் ஷாவை தகுதி நீக்கம் செய்ய வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  #Congress #ElectionCommission #AmitShah
Tags:    

Similar News