செய்திகள்

சுதந்திர தினத்தன்று சபாநாயகர் தேசிய கொடியேற்றக் கூடாது - கோவா காங்கிரஸ் கண்டனம்

Published On 2018-08-10 22:51 GMT   |   Update On 2018-08-10 22:51 GMT
மனோகர் பாரிக்கர் வெளிநாட்டில் இருப்பதால், கோவா சபாநாயகர் தேசிய கொடியேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar #IndependenceDay
பனாஜி:

கோவா முதல் மந்திரியாக இருந்து வருபவர் மனோகர் பாரிக்கர். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக, நேற்று அமெரிக்கா சென்றார். வரும் 17ம் தேதி அவர் கோவா திரும்புகிறார்.

இதையடுத்து, வரும் சுதந்திர தினத்தில் சபாநாயகர் பிரமோத் சாவந்த் தேசிய கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சபாநாயகர் தேசிய கொடி ஏற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சுதந்திர தினவிழாவில் முதல்மந்திரி டான் கொடியேற வேண்டும். அவர் அப்படி வரமுடியாத  நிலையில், அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் தான் கொடியேற்ற வேண்டும். சபாநாயகர் தேச்ய கொடி ஏற்றுவது விதிகளை மீறிய செயலாகும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News