search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோகர் பாரிக்கர்"

    உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் 48 மணிநேரம் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    பாரிக்கரின் உடல்நிலை மோசமடைந்து விட்டதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மூத்த அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இனி அச்சப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சர்தேசாய் கூறினார்.

    கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே, நேற்று மருத்துவமனை சென்று மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரானே, “ மனோகர் பாரிக்கர் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை (இன்று) வீடு திரும்புவார்” எனவும் தெரிவித்தார்.

    பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, முதல்வர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ள கோவா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar #AIIMS
    பனாஜி :

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்களின் அலோசனைப்படி கடந்த மாதம் 15-ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். அவரது உடல்நலம் வெகுவாகக் முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கோவா மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    முதல்வர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இன்று அறிக்கை வெளியிட உள்ளனர். அவரது உடல்நலம் வெகுவாகக் முன்னேறியுள்ளதால் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் பனாஜி அழைத்து வரப்படலாம்.

    இங்கு உள்ள அவரது இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு பாரிக்கருக்கு தேவையான மற்ற சிகிச்சைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இல்லத்தில் இருந்தே அரசு அலுவல்களையும் அவர் கவணிப்பார் என அவர் தெரிவித்தார். #ManoharParrikar #AIIMS
    உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக தொடர்ந்து நீடிப்பார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #ManoharParrikar
    புதுடெல்லி :

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்களின் அலோசனைப்படி கடந்த 15-ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து, கோவா மாநில முதல்வர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே கவர்னரிடம் சென்று காங்கிரஸ் ஆட்சிமைக்க உரிமை கோரியது.

    இந்நிலையில், கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘கோவா மாநில முதல்வர் பதவியில் மனோகர் பாரிக்கர் நீடிப்பார். ஆனால் மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படும். மந்திரிகளின் துறைகள் மாற்றப்படும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். #AmitShah #ManoharParrikar
    உடல்நலக்குறைவால் ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்காவுகு சென்று சிகிச்சை எடுத்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். #ManoharParrikar #GoaCM
    மும்பை:

    கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இம்மாதம் 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார்.

    இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்று இரவு மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.  
    ×