search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unwell"

    • கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தவர் திடீரென இறந்தார்.
    • அறிந்த மனைவி மருதம்பாள் கணவன் பிரிந்த சோகத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமம், சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர்

    கிருஷ்ணமூர்த்தி ( வயது 90), கொத்தனார்.

    இவருடைய மனைவி மருதம்பாள் (வயது 85). இவர்களுக்கு மூன்று பையன்கள் உள்ளனர்.

    அவர்கள் தனியே அருகே அருகே வசித்துவருகிறார்கள். கிருஷ்ணமூர்த்தி ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    மகன்கள் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர்கள்.

    இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தவர் திடீரென இறந்தார். இந்த சம்பவத்தை அறிந்த மனைவி மருதம்பாள் கணவன் பிரிந்த சோகத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    இச்சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுக்கு பெரும் சோகத்தையும் ஏற்படு த்தயுள்ளது.

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். #ManoharParrikar
    புதுடெல்லி:

    கோவா மாநிலத்தில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

    இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.



    அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

    இதற்கிடையே நேற்றிரவு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாகவும் கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். இதனால் கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மனோகர் பாரிக்கர் பதவி விலகினாலோ அல்லது அவருக்கு ஏதாவது ஆகி விட்டாலோ கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்படும் என்று துணை சபாநாயகர் லோபோ கூறியுள்ளார். மனோகர் பாரிக்கர் பதவி விலகினால் புதிய முதல்-மந்திரியாக தங்கள் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிக்கரை தேர்வு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி கூறி வருகிறது. #ManoharParrikar


    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னருக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #ManoharParrikar #GoaCM #Congress #ChandrakantKavlekar
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 14 தொகுதிகளில் பாஜகவும் வென்றன. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது.

    தற்போது, கோவா மாநில முதல்மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் பொறுப்புக்கு யார் வருவது என்ற உட்கட்சி பூசல் அங்கு நிலவுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கோவா மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி, கவர்னர் மாளிகையில் இன்று மனு அளித்துள்ளது.



    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சந்திரகாண்ட் கவ்லேகர், அமைச்சரவையை கலைக்கும் முடிவை எடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக எதிர்க்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், இதர கட்சிகளின் ஆதரவு தற்போது தங்களுக்கே இருப்பதாகவும், வாய்ப்பு அளித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார். #ManoharParrikar #GoaCM #Congress #ChandrakantKavlekar
    ×