சாவிலும் இணைபிரியாத தம்பதி

கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தவர் திடீரென இறந்தார்.அறிந்த மனைவி மருதம்பாள் கணவன் பிரிந்த சோகத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
கிருஷ்ணமூர்த்தி-மருதம்பாள்.
கிருஷ்ணமூர்த்தி-மருதம்பாள்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமம், சிவன்கோயில் தெருவை சேர்ந்தவர்

கிருஷ்ணமூர்த்தி ( வயது 90), கொத்தனார்.

இவருடைய மனைவி மருதம்பாள் (வயது 85). இவர்களுக்கு மூன்று பையன்கள் உள்ளனர்.

அவர்கள் தனியே அருகே அருகே வசித்துவருகிறார்கள். கிருஷ்ணமூர்த்தி ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

மகன்கள் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர்கள்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தவர் திடீரென இறந்தார். இந்த சம்பவத்தை அறிந்த மனைவி மருதம்பாள் கணவன் பிரிந்த சோகத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுக்கு பெரும் சோகத்தையும் ஏற்படு த்தயுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com