செய்திகள்

2014-ல் சுஷ்மா சுவராஜ் பிரதமாராகி இருக்க வேண்டும் - ப.சிதம்பரம் பரபரப்பு தகவல்

Published On 2018-07-08 09:09 GMT   |   Update On 2018-07-08 09:09 GMT
ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2014-ம் ஆண்டு பிரதமாராகி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #Chidambaram
புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்துவரும் சுஷ்மா சுவராஜ் குறித்து முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை சுஷ்மா சுவராஜ் சிறப்பாக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ் என்றும் அப்போதே அவர் பிரதமர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.



ஆனால், 2014-ம் ஆண்டு தேர்தலில் அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், அவரை எதிர்த்து அத்வானியும், சுஷ்மாவும் போராடி, அதில் தோல்வியையே கண்டனர் என்றும் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அறிவாற்றல் மிக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது பணிகளை சிறப்பாக செய்து வருவதாகவும், உதவும் குணம் மிக்க இவர் போன்ற தலைவர்கள் தேவை எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #Chidambaram
Tags:    

Similar News