இந்தியா

ரெயில் பயணிகள் மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை - மம்தா பேனர்ஜி

Published On 2024-06-17 19:18 IST   |   Update On 2024-06-17 19:18:00 IST
  • ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மீதுகூட அக்கறை இல்லை
  • தேர்தலை பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு அக்கறை உள்ளது.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு வருகை தந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ரெயில் பயணிகள் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் மீதுகூட அக்கறை இல்லை

தேர்தலை பற்றி மட்டுமே பாஜக அரசுக்கு அக்கறை உள்ளது. தேர்தலில் எப்படி சூழ்ச்சி செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மட்டுமே பாஜக அரசு செயல்படுகிறது" என்று விமர்சித்துள்ளார்.

Tags:    

Similar News