செய்திகள்

விண்வெளி கேப்ஸ்யூல் இயந்திரம் - வெற்றிகரமாக சோதனை செய்தது இஸ்ரோ

Published On 2018-07-05 09:39 GMT   |   Update On 2018-07-05 09:39 GMT
விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்காக பயன்படுத்தப்படும் விண்வெளி கேப்ஸ்யூல் இயந்திரத்தை இஸ்ரோ சொந்தமாக தயாரித்து இன்று சோதனை செய்தது. #SpaceCapsule #ISRO
புதுடெல்லி:

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கும், ராக்கெட் விண்வெளிக்கு செல்லும்போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிக்கவும் விண்வெளி கேப்ஸ்யூல் இயந்திரத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இந்த இயந்திரமானது அனைத்து கால நிலைகளையும் சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த விண்வெளி கேப்ஸ்யூலை சொந்தமாக உருவாக்க இருப்பதாக  2 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ அறிவித்து இருந்தது. அதன்படி, விண்வெளி கேப்ஸ்யூல் இயந்திரத்தை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

பூமியில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்ட சோதனைகள் விரைவில் நடத்தப்படும். #SpaceCapsule #ISRO
Tags:    

Similar News