செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு - வட மாநிலங்களில் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம்

Published On 2018-07-03 11:30 GMT   |   Update On 2018-07-03 11:30 GMT
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக பா.ஜ.க தலைவர் அமித் ஷா வட மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். #AmitShah
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனாதா கட்சியை தயார் செய்யும் விதமாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஒவ்வொரு மாநிலங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

அதன் ஒருபகுதியாக கேரளா மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அம்மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, இரண்டு நாள் பயணமாக  நாளை உத்திரப்பிரதேசம் செல்லும் அவர், 11-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்திற்கும், 12-ம் தேதி பீகார் மாநிலத்திற்கும் பயணம் செய்ய உள்ளார்.

இறுதியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில கட்சி நிர்வாகிகளை அமித் ஷா 22-ம் தேதி சந்தித்து பேசுகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க.வின் சமூக வளைதள அணி நிர்வாகிகளிடமும் இந்த பயணத்தின் போது அவர் கலந்துரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmitShah
Tags:    

Similar News