செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை 12–வது நாளாக இன்றும் குறைந்தது

Published On 2018-06-10 15:20 GMT   |   Update On 2018-06-10 15:20 GMT
பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் தொடர்ந்து 12–வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. #Petroldiesel
புதுடெல்லி

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 12–வது நாளாக இன்றும் குறைந்தது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகளும், சென்னையில் 26 காசுகளும் குறைந்துள்ளது. பெட்ரோலை போலவே டீசல் விலையும் டெல்லியில் லிட்டருக்கு 18 காசுகளும், சென்னையில் 19 காசுகளும் குறைந்தது.

தொடர்ச்சியான விலை குறைப்பினால், கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.1.74 குறைந்து, சென்னையில் நேற்று ஒரு லிட்டர் ரூ.79.69–க்கு விற்பனையானது. 12 நாட்களில் டீசல் விலை ரூ.1.29 குறைந்து, நேற்று ஒரு லிட்டர் ரூ.71.89–க்கு விற்பனையானது.
Tags:    

Similar News