செய்திகள்

கர்நாடகாவில் தேர்தலில் கைப்பற்றிய பணம், நகை ரூ.200 கோடியாக உயர்வு

Published On 2018-05-07 23:23 GMT   |   Update On 2018-05-07 23:23 GMT
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் ரூ.200 கோடி மதிப்பிலான பணம், பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். #KarnatakaElections
பெங்களூரு:

கர்நாடகாவில் வருகிற 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு பறிமுதலான பணம் மற்றும் நகையின் மதிப்பு ரூ.120 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறுகையில், ‘பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.75.94 கோடி பணம், ரூ.23.98 கோடி மதிப்புள்ள மது, ரூ.62.46 கோடி மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள், ரூ.43.25 கோடி மதிப்புள்ள தங்க, வெள்ளிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பெலகாவி அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஆம்புலன்சில் எடுத்துச் சென்ற ரூ.9 லட்சம் மதிப்புள்ள சேலைகளை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். #KarnatakaElections #Tamilnews 
Tags:    

Similar News