செய்திகள்

கைரானா இடைத்தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக ஒன்றிணையுங்கள் - ராஷ்டிய லோக் தளம் வேண்டுகோள்

Published On 2018-05-06 15:17 GMT   |   Update On 2018-05-06 15:28 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் கைரானா தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ராஷ்டிய லோக் தள வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. #Kairanabypoll #uniteagainstBJP
லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கைரானா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் குகும் சிங் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். மேலும் நூர்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான லோகேந்திர சிங் சாலை விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து இந்த 2 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்த தொகுதியில் ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் ‘தபசும் பேகம்’ இன்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ராஷ்டிய லோக் தளம் கட்சியின் மாநில தலைவர், மசூத் அகமது கூறுகையில் ' பா.ஜ.க.விற்கு எதிராக சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். மேலும் நூர்பூர் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு, ராஷ்டிய லோக் தளம் முழு ஆதரவு அளிக்கும்' என்றார். #Kairana bypoll #uniteagainstBJP
Tags:    

Similar News