செய்திகள்

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவா மோடியா?- குழப்பிய கூகுள் தேடுதல் முடிவுகள்

Published On 2018-04-26 08:52 GMT   |   Update On 2018-04-26 08:52 GMT
இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்ற கேள்விக்கு சரியான பதிலை அளிக்கும் கூகுள் தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படத்தை இடம் பெறச்செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. #Google
புதுடெல்லி:

மனதில் எழும் கேள்விகளோ, சந்தேகமோ உடனே நாம் நாடுவது கூகுளின் உதவியைதான். இந்நிலையில், இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என கூகுளில் கேள்வியை தட்டினால், பதில் ஜவஹர்லால் நேரு என பதில் சரியாக விழுகிறது. ஆனால், நேருவின் புகைப்படத்திற்கு பதிலாக தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படம் அதில் இடம்பெற்றுள்ளது.

அந்ந ஒரு கேள்விக்கு மட்டுமல்ல, நாட்டின் முதல் நிதி, பாதுகாப்பு, ரெயில்வே மந்திரிகள் என தேடினால் பெயர்கள் சரியாக வந்தாலும், தற்போதைய மந்திரிகளின் புகைப்படம் அதில் இடம்பெற்றுள்ளது. கூகுளின் இந்த குழப்ப முடிவுகள் இன்று காலை முதல் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது.


இந்தியாவின் முதல் பிரதமர் என நாம் தேடும் போது பிரதமர் பட்டியலுக்கான லிங்க் தோன்றுகிறது. தற்போதைய பிரதமர் மோடி என்பதால் அவரின் புகைப்படம் அந்த பட்டியலின் அடிப்படையில் தோன்றுவதாக சில தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர். #Google

அருண் ஜெட்லி

Tags:    

Similar News