செய்திகள்

கேரளாவில் லாட்டரியில் வியாபாரிக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு

Published On 2018-04-26 06:20 GMT   |   Update On 2018-04-26 06:20 GMT
கேரளாவில் காருண்யா ஸ்ரீசக்தி லாட்டரி குலுக்கலில் வியாபாரி ஒருவருக்கு முதல் பரிசாக ரூ.60 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள அரசு சார்பில் காருண்யா பாக்யலெட்சுமி, காருண்யா பாக்யஸ்ரீ, காருண்யா ஸ்ரீசக்தி என்ற லாட்டரி சீட்டுகளை நடத்தி வருகிறது.

இந்த லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதில், காருண்யா ஸ்ரீசக்தி லாட்டரி விற்பனை மூலம் கிடைக்கும் தொகை பெண்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் காருண்யா ஸ்ரீசக்தி லாட்டரி குலுக்கல் நடைபெற்றது.

இதில் முதல் பரிசான ரூ.60 லட்சம் கேரள மாநிலம் சிறையின்கீழ் பகுதியைச் சேர்ந்த அரிதாசன் (வயது 48) என்பவருக்கு கிடைத்துள்ளது. இரும்பு வியாபாரியான இவருக்கு சிகா என்ற மனைவியும், அமல்தாஸ், அகில்தாஸ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.



ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நான் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகிறேன். சிறு பரிசுகள் கிடைத்துள்ளது. தற்போதுதான் முதல் பரிசாக பெரிய தொகை கிடைத்துள்ளது. எனக்கு நிறைய கடன் உள்ளது. அந்த கடன்களை அடைத்து விட்டு எனது வியாபாரத்தை பெரிய அளவில் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News