செய்திகள்

தனி செயலகம் வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு

Published On 2018-04-25 10:27 GMT   |   Update On 2018-04-25 10:27 GMT
தனி செயலகம் வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமானப்பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில், மத்திய அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது. #ECI
புதுடெல்லி:

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் தேர்தல் ஆணையம் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பல பக்கங்கள் கொண்ட பிரமானப்பத்திரத்தை தேர்தல் ஆணையம் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில், பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு உள்ளது போல தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் அமைக்க வேண்டும். அரசியல் அழுத்தங்களை தவிர்த்து தேர்தலை மேம்பட்ட வகையில் நடத்த அது உதவியாக இருக்கும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற செயலக செலவுகளை மத்திய அரசு ஏற்பதுபோல் தேர்தல் ஆணைய செயலக செலவுகளையும் ஏற்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பிரமானப்பத்திரத்திற்கு மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தை சீரமைக்க கோரி தாக்கல் செய்யட்ட அந்த பொதுநல மனுவை எதிர்த்து மத்திய அரசு பதிலளித்துள்ளது. பாராளுமன்ற செயலகங்களை போல தனி செயலகம் கோரும் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ECI #TamilNews
Tags:    

Similar News