செய்திகள்

கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படாததால் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

Published On 2018-04-22 23:54 GMT   |   Update On 2018-04-22 23:54 GMT
மராட்டிய மாநிலத்தில் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படாததால் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே:

மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் இந்தாபூர் தாலுகா கர்தன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் சோபன் பவார்(வயது48). விவசாயி. அவர் நேற்று கிராமத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வசந்த் சோபன் பவாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த் சோபன் பவார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கிராமத்தில் உள்ள நீர்பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடாததால் அவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், தண்ணீர் திறக்கப்படாததற்கு 2 மராட்டிய மந்திரிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த கடிதம் வசந்த் சோபன் பவாரால் தான் எழுதப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News