செய்திகள்

தெலுங்கானா போலீசாரின் நவீன தொழில்நுட்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன்

Published On 2018-04-19 16:17 GMT   |   Update On 2018-04-19 16:17 GMT
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களை பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், ஐதராபாத் நகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் மற்றும் புஞ்சகுட்டா போலீஸ் ஸ்டேசன் ஆகியவற்றுக்கு பினராயி விஜயன் திடீர் விசிட் அடித்தார்.

அவருடன் தெலுங்கானா உள்துறை மந்திரி நரசிம்ம ரெட்டி மற்றும் போலீஸ் டி.ஜி.பி ஆகியோரும் உடனிருந்தனர். தெலுங்கானா போலீசார் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களை பார்வையிட்ட அவர் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், கேரளாவிலும் இதே போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு வர அதிகாரிகள் குழு ஒன்றை பயிற்சி எடுக்க அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #TamilNews
Tags:    

Similar News