செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் - எடியூரப்பா வேட்புமனு தாக்கல்

Published On 2018-04-19 11:38 GMT   |   Update On 2018-04-19 11:38 GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #Karnataka #Assemblyelection #Yeddyurappa
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ந்தேதி நடக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 218 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதே போல் பா.ஜனதாவும் 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 3 கட்டமாக வெளியிட்டது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

எடியூரப்பா ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சத்தீஸ்கர் முதல் மந்திரி ராமன்சிங் மற்றும் மத்திய மந்திரிகள் ஆனந்த்குமார், ரமேஷ் ஜிகாஜினகி ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், கர்நாடக முன்னாள் முதல் மந்திரி ஜகதீஷ் ஷெட்டர் முன்னிலையில் முன்னாள் துணை முதல் மந்திரி ஈஸ்வரப்பா ஷிவமோகா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

மேலும், மூத்த காங்கிரஸ் தலைவரான ஷிவகுமார் கனகபுரா தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். #Karnataka #Assemblyelection #Yeddyurappa #Tamilnews
Tags:    

Similar News