செய்திகள்

நாடு முழுவதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதம்

Published On 2018-04-12 09:28 GMT   |   Update On 2018-04-12 09:28 GMT
பாராளுமன்றம் முடக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்தனர். 600 மாவட்டங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
புதுடெல்லி:

பாராளுமன்ற கூட்டத்தொடர்பு சமீபத்தில் ஒருநாள் கூட நடக்காமல் முழுமையாக முடங்கியது.

இதனால் அரசுக்கு சுமார் ரூ.350 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றம் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காங்கிரசை கண்டித்து பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 12-ந்தேதி உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் இருந்தனர். 600 மாவட்டங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

பெரும்பாலான பா.ஜ.க. எம்.பி.க்கள், தங்கள் தொகுதியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹுப்ளியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், தர்மேந்திர பிதான், சுரேஷ் பிரபு ஆகியோர் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

மத்திய மந்திரி பியூஸ் கோயல் தானேயிலும் ஜெ.பி. நட்டா வாரணாசியிலும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இன்று மாலை வரை பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
Tags:    

Similar News