search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக எம்பிக்கள்"

    • ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த தொடரில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
    • முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் அவையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    முன்னதாக எதற்காக இந்த கூட்டம் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து முதல் நாளில் விவாதிக்கப்பட உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு 17-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த தொடரில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மக்களவை பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டு உள்ளார்.

    முக்கியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் அவையில் இருக்குமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
    • அனைத்து எம்.பி.க்களும் அவர்களது தொகுதிகளில் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை பிரசாரம் செய்து அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறுங்கள்.

    புதுடெல்லி:

    பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி அனைத்து எம்.பி.க்களும் அவர்களது தொகுதிகளில் மே மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை பிரசாரம் செய்து அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறுங்கள்.

    இவ்வாறு மோடி பேசியதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு கட்சியின் தலைர் ஜே.பி.நட்டா மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் வருகிற 16-ந்தேதி டெல்லிக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
    • அன்று மாலை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. அன்றே ஜனாதிபதி பதவிக்கு தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கு ஒருநாள் முன்னதாக 17-ந்தேதி பா.ஜனதா பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது.

    வழக்கமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் முதல் செவ்வாய்க்கிழமை பா.ஜனதா பாராளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் வருகிற 16-ந்தேதி டெல்லிக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அன்று மாலை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பது குறித்து பயிற்சியும் அப்போது அளிக்கப்படுகிறது. அன்று இரவு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு ஜே.பி.நட்டா இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    மறுநாள் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாராளுமன்ற பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தின் போது பா.ஜனதா எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் முறையாக வாக்களிக்க உள்ளதால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    ×