செய்திகள்

செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2018-03-29 14:27 GMT   |   Update On 2018-03-29 14:27 GMT
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிசாட் 6-ஏ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #ISRO #GSAT6A #GSLVF08 #PMModi #Tamilnews
புதுடெல்லி:

இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத்தொடர்புக்கு உதவும்  ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜிசாட் 6-ஏ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஜிஎஸ்.எல்.வி - எப்08 கிரயஜோனிக் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கும், அதில் பணியாற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜிசாட்-6ஏ தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் செல்போன் பயன்பாடுகளுக்கு புதிய சாத்தியங்களை வழங்கும் என பதிவிட்டுள்ளார். 
#ISRO #GSAT6A #GSLVF08 #PMModi #Tamilnews
Tags:    

Similar News