செய்திகள்

அயோத்தி வழக்கை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Published On 2018-03-23 11:52 GMT   |   Update On 2018-03-23 11:52 GMT
அயோத்தி வழக்கு விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #Ayodhyacase #supremecourt
புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.

இந்த வழக்கை  நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.  கடந்த  பிப்ரவரி மாதம் முதல் இறுதி விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் அயோத்தி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்றும் இறுதி விசாரணை நடைபெற்றது. பின்னர், அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே, அயோத்தி வழக்கில் தங்களையும் மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள வேண்டி சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், முந்தைய விசாரணையின்போது அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன், மூல வழக்கு மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews #supremecourt #Ayodhyacase
Tags:    

Similar News