search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பிரமணிய சாமி"

    • தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணமில்லை என்பதால் மறுத்து விட்டேன் என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்
    • நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது

    மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும், தன்னிடம் தேவையான பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் நிதியமைச்சரிடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா? என்று கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் "என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம், என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது" என்றார்.

    இந்நிலையில், இது தொடர்பாக, பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணிய சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட மோடியிடம் பணம் கேட்டிருக்கலாம். மேலும் அவர் 2004-05 மற்றும் 2022-23க்கான வருமான வரி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாததற்கான உண்மையான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
    • மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர்.

    புதுடெல்லி :

    ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 19-ந்தேதி விசாரித்தது.

    அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் ஆய்வில் உள்ளது என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர். மத்திய அரசு எடுக்கும் முடிவு தொடர்பாக கோர்ட்டை நாடுவதற்கும் சாமிக்கு அனுமதி அளித்து, அவருடைய இடையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.

    இந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு சுப்பிரமணிய சாமி முறையிட்டார்.

    ''இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்பதால் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, அரசியல்சட்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் நிறைவடைந்த பிறகு இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விளக்கமளித்துள்ளார். #ThoothukudiShooting
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலோ அல்லது துப்பாக்கிச்சூடு குறித்து எந்த கருத்தும் பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்த முழு அறிக்கை வெளியாகாததாலே பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று அவர் சென்னையில் பேசும் போது அரசியலில் இருந்து நடிகர்கள் விலகியே இருக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×