என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய சின்னம்"
- சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
- சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்
புதுடெல்லி:
முன்னாள் மேல்-சபை எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க தான் விடுவித்த கோரிக்கை குறித்து விரைவாக முடிவு செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். பின்னர் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
- மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
- மத்திய அரசு எடுக்கும் முடிவில் நிவாரணம் தேவையென்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாட நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
புதுடெல்லி:
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. சுப்பிரமணிய சுவாமி தரப்பில் கூறும்போது,
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இழுத்தடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றனர்.
இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த பதிலை ஏற்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரப்படும் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசு எடுக்கும் முடிவில் நிவாரணம் தேவையென்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாட நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
- ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
- மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர்.
புதுடெல்லி :
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 19-ந்தேதி விசாரித்தது.
அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் ஆய்வில் உள்ளது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர். மத்திய அரசு எடுக்கும் முடிவு தொடர்பாக கோர்ட்டை நாடுவதற்கும் சாமிக்கு அனுமதி அளித்து, அவருடைய இடையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு சுப்பிரமணிய சாமி முறையிட்டார்.
''இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்பதால் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, அரசியல்சட்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் நிறைவடைந்த பிறகு இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.






