செய்திகள்

பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கம் - எம்.பி.க்களுக்கு அளிக்கும் விருந்தை ரத்து செய்தார் துணை ஜனாதிபதி

Published On 2018-03-20 12:52 GMT   |   Update On 2018-03-20 12:52 GMT
பல்வேறு விவகாரங்களால் பாராளுமன்றம் 12 நாட்களாக முடங்கியுள்ள நிலையில், எம்.பி.க்களுக்கு அளிக்கும் விருந்தை துணை ஜனாதிபதி ரத்து செய்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 5-ம் தேதி கூடியது. காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி வங்கி மோசடி உள்ளிட்ட விவாகாரங்களில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் கடந்த 12 நாட்களாக முடங்கியுள்ளன.

அமளி காரணமாக நிதி மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளது.



ஆனால், அமளியால் இந்த நோட்டீஸ் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவை சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு எம்.பி.க்களுக்கு அளிக்க இருந்த விருந்தை ரத்து செய்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருந்த இந்த விருந்துங்கு அழைப்பிதல் அச்சடிக்கப்பட்டு, அனைத்து வேலைகளும் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், அவர் விருந்தை ரத்து செய்துள்ளார். 12 நாட்களாக அவை ஒழுங்காக நடக்காததற்கு வெங்கையா நாயுடு ஏற்கனவே வேதனை தெரிவித்திருந்தார். #TamilNews
Tags:    

Similar News